rss
    :)))

20 November 2013

குளிர்காலக் காதலி

கார்த்திகை 20, 2013 


தாயின் மடியின் கதகதப்பை மீண்டும் ஒருமுறை உணர்த்தியவள்
தாயின் மடிச் சொந்தம் தாய்நாடோடு நின்றுபோக
இவளின் சொந்தமோ தாய்நாடு வரைக்கும் வந்து போனது
இது அவளுடனான எனது உறவின் மூன்றாவது கார்த்திகை,
உயிருக்கும் உணர்வுக்கும் உறவில்லை என்று உயிரில்லாமல் என்
உடலோடு ஒட்டி நின்று உணர்த்தியவள்
இதோ மீண்டும் வந்துவிட்டாள் வெள்ளைத் தோற்காரி, மார்கழிப் பனி
இவளிடமிருந்து என்னைக் காப்பதே இவள் பணி

12 October 2012

Karate - ஒரு வாழ்க்கைப் பயணம்

***சரியான கருத்தை தருவதற்காக(??!!) சில சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன்!!!
 
எங்களுக்கு நடனமும் சங்கீதமும் எப்பிடியோ அதே போல் தான் இந்த karate  சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும். ஆனால் இன்று பழக்கத்திலுள்ள ஒரு எண்பது சதவீதமான karate  styles  ஜப்பான் தேசத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என்னை பொறுத்தவரை,  ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் பயிற்சி முறை, பரப்மபரை பரம்பரையாக நாட்டிற்காக தங்களேயே அர்பணித்த வீரம், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு "உடன்" முடிவெடுக்கும் திறன் எல்லாம் கொண்ட "சாமுராய்கள்"தான்  முக்கிய காரணம். 

7 March 2011

சூப்பர் கார் - Bugatti Veyron

Volkswagen Group (VW Group), உலகின் மூன்றாவதும் , ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் பெரியதுமான ஜேர்மன் நாட்டினது கார் தயாரிப்பு நிறுவனம். இதில் முதலிடத்தில் இருப்பது Toyoto Group. SEAT, Audi, Škoda மற்றும் Lamborghini, Bentley, and Bugatti போன்ற புகழ் பெற்ற கார்கள் அனைத்தும் இந்த VW Group இன் தயாரிப்பே. இக் கட்டுரையில் விரிவாக அலச இருப்பது Bugatti Veyron EB 16.4 கார் பற்றி.

13 January 2011

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை - பகுதி # 2

முன்னதாகவே இது பற்றி ஒரு பதிவை பிரசுரித்திருந்தேன். இங்கே சென்று அதனை வாசித்துக்கொள்ளுங்கள். இப்பதிவு, சட்டபூர்வமாக பயன்படுத்தும் வகையில், அதுவும் இலவசமாக எப்படி காப்புரிமை பெறுவது என்பது பற்றியது.

சட்டபூர்வமான முறையில் காப்புரிமை பெறுவதற்கு நீங்கள் www.copyright.gov என்ற தளத்திற்க்கு சென்று $35.00ஐ கட்டணமாக கட்டுவதன் மூலம் இலத்திரனியல் ரீதியிலான முறையில் காப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு ஒரு தொகை செலுத்தி காப்புரிமை பெறும் வசதி இல்லை. அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளம்தான்

11 January 2011

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை - பகுதி # 1

நான் இந்த பதிவு எழுதும்பகுதிக்கு புதியவன், ஆனால் பல வருட வாசகன். நான் வாசகனாக மட்டும் இருந்த காலத்தில், ஒரே ஆக்கத்தை பல தளங்களில் வாசித்ததுண்டு. அப்பொழுதெல்லாம் காப்புரிமை, யாருடையது மூலப்பிரதி என்பது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை. ஆனால் இன்று நானும் ஒரு பதிவெழுதும் பொழுது, என்னுடைய பதிவுகள் எனது அடையாளத்தை தொலைத்து நிற்கும் போது , இனால் அந்த வேதனையை உணரமுடிகின்றது. அப்படி ஒரு உணர்வின் தாக்கமே இந்தப் பதிவு!