rss
    :)))

11 January 2011

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை - பகுதி # 1

நான் இந்த பதிவு எழுதும்பகுதிக்கு புதியவன், ஆனால் பல வருட வாசகன். நான் வாசகனாக மட்டும் இருந்த காலத்தில், ஒரே ஆக்கத்தை பல தளங்களில் வாசித்ததுண்டு. அப்பொழுதெல்லாம் காப்புரிமை, யாருடையது மூலப்பிரதி என்பது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை. ஆனால் இன்று நானும் ஒரு பதிவெழுதும் பொழுது, என்னுடைய பதிவுகள் எனது அடையாளத்தை தொலைத்து நிற்கும் போது , இனால் அந்த வேதனையை உணரமுடிகின்றது. அப்படி ஒரு உணர்வின் தாக்கமே இந்தப் பதிவு!


ஒவ்வொரு எழுத்தாளனும் வாசகன்.  தினமும் ஏதாவது ஒன்றை வாசிப்பதன் மூலமே  தன்னுடைய எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கின்றான். அப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களும் தம்முடைய நேரம் மற்றும் உழைப்பு என்பவற்றை விலையாக கொடுத்தே ஒவ்வொரு கட்டுரையையும் உருவாக்குகிறார்கள், செதுக்குகிறார்கள். அவர்கள் இழந்த உழைப்பினதும் நேரத்தினதும் அடையாளமே அவர்களது ஆக்கங்கள். இப்படி இருக்க, பலர், ஒருவர் எழுதிய ஆக்கத்தை எழுதியவரது எந்த ஒரு அனுமதியோ அல்லது மூலப்பிரதியை குறிப்பிடாமல் தமது வலைதளங்களில் பிரசுரிப்பது தொன்றுதொட்டு நடந்தேறிவருகின்றது. இதனை எவ்வாறு தடுப்பது? உங்கள் பதிவு உங்கள் அனுமதி இல்லாமல் வேறு ஒரு தளத்தில் பிரசுரிக்கபட்டால் என்ன செய்வது? போன்ற கேள்விகளுக்கு இப்பதிவின் மூலம் விடை கிடைக்கும் என நம்புகின்றேன். 

உங்கள் கட்டுரை வேறு தளத்தில் பிரசுரிக்கப்படுள்ளது என்பதை அறிவது எப்படி?
இது மிகவும் இலகுவானது. கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. உங்கள் பதிவிலுள்ள ஒரு வசனத்தை பிரதி பண்ணி அதை கூகிளில் தேடுவதன் மூலம் உங்கள் பதிவு எந்தெந்த தளங்களில் பிரசுரிக்கப்படுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். புதிய பதிவென்றால் யாகூவில்(Yahoo) தேடுவது இன்னும் உகந்தது, ஏனெனில் கூகுளை விட யாஹூ வேகமாக  புதுப்பிக்கின்றது (updating).  

உங்கள் அனுமதியின்றி பிரதி பண்ணப்பட்டுள்ள பதிவினை அத்தளத்திலிருந்து அகற்றும்படி கோருவது எப்படி?
பொதுவாக அனைத்து தளங்களும் "Contact Us" பகுதியை கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களது பதிவினை அகற்றும்படி அவ்வலைத்தளத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். தொடர்பு கொள்ளும் பகுதி இல்லாவிடின் பின்னூட்டம் மூலம் குறிப்பிடவும். 

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கும், பின்னூட்டத்துக்கும் மறுபதில் வரவில்லை. என்ன செய்வது?
Climax! மீண்டும் அத்தளத்தை தொடர்புகொள்வதில் பயனில்லை. இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவ்வளைத்தளத்தை host பண்ணும் நிறுவனத்தை. இது பற்றிய விவரங்களை www.whoishostingthis.com என்னும் தளத்தில் இணையத்தள முகவரியை (Website url) வழங்குவதன் மூலம் (Type and Search) பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக Web hosting பண்ணும் நிறுவனங்கள் தமக்கு வரும் முறையீடுகளுக்கு, வேகமாக மறுபதில் அனுப்புபவை. அதிலும் இவ்வாறான இணையதளங்களை பிரதி பண்ணுதல் பற்றிய புகார்களுக்கு இன்னும் வேகமாக பதில் தரப்படும். முறைப்பாடுகளை அனுப்பும் போது உங்கள் பதிவுதான் முதலில் பிரசுரிக்கப்ட்டது என்பதை உறுதி பண்ணுவதற்கான சான்றுகளையும் அனுப்பவேண்டும். உதாரணமாக, tamilish, facebook, twitter போன்ற தளங்களில் உங்கள் பதிவு முதலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற ஆதாரங்கள்.

இது தவிர பொதுவாக மறுபிரசுரம் செய்யும் வலைதளங்களின் பொதுவான நோக்கம் பணம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிப்பதே. எனவே அவ் விளம்பர நிறுவனங்களுக்கு முறைப்பாடு அனுப்புவதன் மூலம் உங்கள் பதிவினை நீக்கலாம். உதாரணமாக, உங்கள் ஆக்கத்தை மறுபிரசுரம் செய்த வலைத்தளம் Google Adsense பயன்படுத்தும் தளமாக இருந்தால் அவ்வளைத்தளத்திலுள்ள ஒரு விளம்பரதிற்கு
 (பொதுவாக வலப்பக்க மூலையில்) அருகில் cursorஐ கொண்டு செல்லும் போது "Ads by Google" என மாற்றமடையும். அதனை click பண்ணினால் அது பின்வரும் தோற்றம் கொண்ட ஒரு வலைதளத்திற்கு கொண்டு செல்லும். அதிலுள்ள "Please let us know" பகுதிக்கு செல்வதன் மூலமும் உங்கள் முறைப்பாட்டினை அனுப்பிவைக்கலாம்.


வலைப்பூ பிரதிபண்ணப்படுவதை தடுப்பது எப்படி?
உங்களது வலைபூவிலுள்ள ஆக்கங்களின் பதிப்புரிமை மற்றும் மீள் பிரசுர உரிமை பற்றிய தகவலை மிகவும் தெளிவான முறையில் விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் Creative Commons. விக்கிபீடியா நிறுவனத்தின் பதிப்புரிமை தொடர்பான தகவல்கள் இந்த Creative Commons நிறுவனத்தின் எண்ணியல் (Digital) வடிவிலான குறியீடுகள் மூலமே குறிப்பிடப்படுகின்றன. இங்கே செல்வதன் மூலம் உங்கள் தளம் எப்படியான உரிமைகளை கொண்டிருக்கவேண்டுமென சமர்ப்பிப்பதன் மூலம் அதற்குரிய script ஐ உங்கள் வலைப்பூவில் நிறுவிக்கொள்ளலாம்.

எது எப்படியோ,ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். ஒரு தளத்தை அனுமதியின்றி மீள் பிரசுரம் செய்யும்போது அத்தளத்தின் முகவரியை பிற்குறிப்பாக குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் ஒன்றும் தாழ்ந்து விடமாட்டீர்கள், மாறாக ஒரு எழுத்தாளனை ஊக்குவித்தவராவீர்கள்.
MyFreeCopyright.com Registered & Protected

9 comments:

  1. மிக்க பயனுள்ள தகவல்கள் நண்பரே!

    இதை யாரும் பிரதி பண்ணாம பாருங்கோ ;))

    ReplyDelete
  2. மிக்க பயனுள்ள தகவல்கள் நண்பரே!

    இதை யாரும் பிரதி பண்ணாம பாருங்கோ ;)
    /////

    ரிப்பிட்டு....

    மிக அருமை.......

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள் நண்பரே!

    ReplyDelete
  4. @துயரி - கருத்துக்கு நன்றி தோழா! நான் பிரதி பண்ணுவதை தவறு என்று சொல்லவில்லை, பிற்குறிப்பில் மூலப்பிரதிக்குரிய முகவரியை கொடுக்க வேண்டும். அதாவது : "Attribution — They must attribute the work in the manner specified by the author or licensor."

    @உலவு.காம், sakthistudycentre.blogspot.com - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்களே :)

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. அருமை நன்பரே...பயனுள்ள விஷயங்கள்,சில புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.
    :

    ReplyDelete
  7. நல்லதொரு தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு...தேவையான தகவலை அருமையாக சொல்லியிருக்கீங்க பாஸ்!!!

    ReplyDelete
    Replies
    1. பாஸ்! நாம நம்ம சமுதாயத்துக்கு நல்லது செய்வமெண்டு தொழில்நுட்பம் பக்கம் போய்டாதீங்க. அது நீங்க எழுதின பதிவா எண்டு உங்களுக்கே டௌட் வந்துடும் ஹஹாஹா =))) நன்றி பாஸ் :)

      Delete