rss
    :)))

12 October 2012

Karate - ஒரு வாழ்க்கைப் பயணம்

***சரியான கருத்தை தருவதற்காக(??!!) சில சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன்!!!
 
எங்களுக்கு நடனமும் சங்கீதமும் எப்பிடியோ அதே போல் தான் இந்த karate  சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும். ஆனால் இன்று பழக்கத்திலுள்ள ஒரு எண்பது சதவீதமான karate  styles  ஜப்பான் தேசத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என்னை பொறுத்தவரை,  ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் பயிற்சி முறை, பரப்மபரை பரம்பரையாக நாட்டிற்காக தங்களேயே அர்பணித்த வீரம், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு "உடன்" முடிவெடுக்கும் திறன் எல்லாம் கொண்ட "சாமுராய்கள்"தான்  முக்கிய காரணம். 

இன்று karate  பழகுபவர்களின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டோடு ஒப்பிடுகையில் அதிகம்தான். அதற்கு சினிமா மற்றும் Jackie Chan ,  Jet Lee , Tony Jaa ,Donnie Yen போன்ற பிரபலங்களை பின்பற்றுபவர்கள், உடல் எடையை குறைக்க முயலுபவர்கள் போன்ற பல காரணங்களை கூறலாம். ஆனால் இப்படி சாமுராய்களாய் வாழ்ந்தவர்களது வீரம் இன்று karateஇல் Black  Belt  என்னும் நிலையோடு நின்று போனது சோகமே. இன்று karate பழகும் பல மாணவர்களது குறிக்கோள் "Black  Belt"  எடுக்குறது மட்டும்தான். ஆனால் உண்மையான karate  என்பது ஒரு வாழ்க்கைப் பயணம் ( Life Long Journey ).  
Hirokazu Kanazawa
முறையா சங்கீதம், நடனம் படிச்சு முடிக்கிறதுக்கு பல வருடங்கள் செல்லும். ஆனால் karate  அப்படியில்லை. வாழ்க்கை முழுவதும் karate யையே தொழிலா கொண்டு  விடாம பழகி கொண்டு வந்தா ஒரு 70 - 80  வயசில 10th Dan எண்டுற karate இன் அதி கூடிய தகுதியை அடையலாம். இன்றைய திகதிக்கு, 10th Dan வரைக்கும் எடுத்திருக்கிற, உயிரோட இருக்கிற மற்றும் இன்னும் karate பயிற்றுவிக்கும் ஒரே ஒரு ஆசிரியர்  Hirokazu Kanazawa (81 வயது (2012 ), Shotokan Style) . Shotokan  Style தான் உலகின் முதன்மையானதும் மற்றும் பழமையானதுமான ஒரு karate  style . அப்ப Black Belt என்ன எண்டுற கேள்வி வரும்! Black Belt  எண்டுறது karate பழகுறதுக்கு ஒரு entry level  requirement  மாதிரி.  

Black Belt எடுத்த உடன sempai (assistant teacher) எண்டுற தகுதி கிடைக்கும். இதுல இருந்து முறையான தலைமைத்துவத்துடன் கூடிய பயிற்சி ஆரம்பமாகும். முன்னதாக படித்த karate உத்திகளின் மறைமுக அர்த்தங்கள் எல்லாம் Black  Belt எடுத்த பின்பு தான் பயிற்றுவிக்கப்படும். இதை Peter Lindsay எண்டுற ஆசிரியர் மிகவும் அழகாக எழுதியுள்ளார். தமிழில் மொழிபெயர்த்தால் அதனது கருத்து வரும் ஆனால் அதில் உள்ள அழகோடு எனக்கு சொல்ல தெரியாது, அதானால் அப்படியே தருகிறேன்.

"Starting out wearing a white belt made of cotton, the student rises up through the ten kyu (colour belt) ranks until they find themselves on the threshold of their Sho Dan (1st degree black belt) grading. Finally upon passing their grading they are a "black belt" at last. They will now wear this colour of belt for the remainder of their martial arts career, and when the years have passed and their belt has been tied and untied a countless number of times, the student will look down one day late in life and notice that all the black colouring has ultimately worn off.
 
Their belt is now white again.
 
The beginner has now become the master, who after a lifetime of training has in the end come to see the truth, that they have in fact always been just a white belt, the colour its self was always just an illusion, something to feed their ego until, when after many years of physical, mental and spiritual training, the time came when ego no longer mattered" 
 
"Shotokan" பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். 
 
வழக்கம் போல உங்கட பொன்னான கருத்துக்களும் நிறை குறைகளும் வரவேற்கப்படுகின்றன.

2 comments:

  1. //இன்று karate பழகும் பல மாணவர்களது குறிக்கோள் "Black Belt" எடுக்குறது மட்டும் தான்.// உண்மைதான்.... பலருக்கு அதுக்கப்பால் என்ன என்ற ஒரு சிந்தனை இல்லைதான்.

    ReplyDelete
  2. என்ன பாஸ்? உங்களுக்கு தெரியாததா? =)) நன்றி பாஸ் :)

    ReplyDelete