rss
    :)))

13 January 2011

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை - பகுதி # 2

முன்னதாகவே இது பற்றி ஒரு பதிவை பிரசுரித்திருந்தேன். இங்கே சென்று அதனை வாசித்துக்கொள்ளுங்கள். இப்பதிவு, சட்டபூர்வமாக பயன்படுத்தும் வகையில், அதுவும் இலவசமாக எப்படி காப்புரிமை பெறுவது என்பது பற்றியது.

சட்டபூர்வமான முறையில் காப்புரிமை பெறுவதற்கு நீங்கள் www.copyright.gov என்ற தளத்திற்க்கு சென்று $35.00ஐ கட்டணமாக கட்டுவதன் மூலம் இலத்திரனியல் ரீதியிலான முறையில் காப்புரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு ஒரு தொகை செலுத்தி காப்புரிமை பெறும் வசதி இல்லை. அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளம்தான்

11 January 2011

வலைப்பூவிற்கு இலவச காப்புரிமை - பகுதி # 1

நான் இந்த பதிவு எழுதும்பகுதிக்கு புதியவன், ஆனால் பல வருட வாசகன். நான் வாசகனாக மட்டும் இருந்த காலத்தில், ஒரே ஆக்கத்தை பல தளங்களில் வாசித்ததுண்டு. அப்பொழுதெல்லாம் காப்புரிமை, யாருடையது மூலப்பிரதி என்பது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை. ஆனால் இன்று நானும் ஒரு பதிவெழுதும் பொழுது, என்னுடைய பதிவுகள் எனது அடையாளத்தை தொலைத்து நிற்கும் போது , இனால் அந்த வேதனையை உணரமுடிகின்றது. அப்படி ஒரு உணர்வின் தாக்கமே இந்தப் பதிவு!

6 January 2011

Apple iPad ஐ வீழ்த்துமா Blackberry PlayBook?

BlackBerry , RIM (Research In Motion) எனப்படும் கனேடிய நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 1976 இல் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தனியே கணணி துறையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் காலப்போக்கில் iPod, iPhone மற்றும் இறுதியாக iPad என தனது சிறு எல்லையை சாம்ராஜ்ஜியமாக விரிவுபடுத்திக்கொண்டது. ஆனாலும், மறுபக்கத்தில் இதற்கெல்லாம் நான் சளைத்தவன் இல்லை என்பது போல் BlackBerryயும் தனது சேவையை மேம்படுத்திக்கொண்டு வந்தது. இதற்க்கு உதாரணமாக iPhone க்கு நிகராக இல்லை என்றாலும் அதற்க்கு போட்டியாக Blackberryயின் BlackBerry Torch, BlackBerry Bold மற்றும் BlackBerry Curve ஆகியவற்றை குறிப்பிடலாம்.

Google Docல் ஒரு Animation

நாம் அனைவரும் பழைய Disney cartoon பார்த்திருப்போம். ஆரம்பகால Disney கார்டூன்களில் பெரும்பாலானவை ஓவிய அசைவுகள் மூலமே உருவாக்கப்பட்டன, அதாவது ஓவியங்களில் சிறு சிறு மாதங்களை ஏற்படுத்தி அவற்ற்றை வேகமாக அசைப்பதன் மூலம் உருவங்கள் அசைவது போல் காட்டப்பட்டன. கார்டூன்களை ஒத்தது Tu+, Namroc மற்றும் Metcalf  ஆகிய மூன்று நபர்களும் இணைந்து எந்த வித Animation மென்பொருளோ அல்லது உயர் தொழில்நுட்பமோ பயன்படுத்தாது தனியே கூகிள் நிறுவனத்தின் Google Docs என்னும் சேவையையும் அதில் வழங்கப்படும் உள்ளீட்டு சேவைகளான வரைபுகள், உருவப்படங்கள் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி 450 பக்கங்களில் அருமையான ஒரு Animationஐ உருவாகியுள்ளார்கள். இதை முடிப்பதற்க்கு இவர்கள் மூவரும் எடுத்து கொண்டது வெறும் மூன்றே மூன்று நாட்கள்தான். முடிந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம்.