rss
    :)))

7 March 2011

சூப்பர் கார் - Bugatti Veyron

Volkswagen Group (VW Group), உலகின் மூன்றாவதும் , ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் பெரியதுமான ஜேர்மன் நாட்டினது கார் தயாரிப்பு நிறுவனம். இதில் முதலிடத்தில் இருப்பது Toyoto Group. SEAT, Audi, Škoda மற்றும் Lamborghini, Bentley, and Bugatti போன்ற புகழ் பெற்ற கார்கள் அனைத்தும் இந்த VW Group இன் தயாரிப்பே. இக் கட்டுரையில் விரிவாக அலச இருப்பது Bugatti Veyron EB 16.4 கார் பற்றி.



Buggati என்ற பெயர் 1939 இல் புகழ் பெற்ற பிரெஞ்சு கார் பந்தய வீரர் Pierre Veyron ஐ குறிப்பதாகும். அத்துடன் இந் நிறுவனம், BBC நிறுவனத்தினது கார்கள் பற்றிய புகழ் பெற்ற நிகழ்ச்சியான Top Gear மூலம் "Car of the Decade" (2000-2009) என்னும் பெயர் பெற்றது. Bugatti Veyron EB 16.4 முதல் முதலாக தயாரிக்கப்பட்டது 2005 ஆம் ஆண்டிலாகும். இக் கார் உற்பத்தி செய்ய பயன்படுத்தும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் விமானம் தயாரிக்க பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை ஒத்ததாகும்.


இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களிலே உலகின் வேகமான கார் இந்த Bugatti Veyron 16.4. இதனது அதிகூடிய கதி மணிக்கு 431.07 km (267.85 mph). இது 253 mph கதியில் செல்லும் பொது உள்வாங்கும் காற்றினளவு நிமிடத்திற்கு  47,000 litre, இது ஒரு மனிதன் நான்கு நாட்களுக்கு சுவாசிக்கும் காற்றினலவுக்கு சமமானது.    மேலும், உலகின் விலை கூடிய காரும் இதுதான். இக் காரினது  2010 - 2011 இற்கான சராசரி விலை $ 1,700,000.00 ($ 1.7 million). இது 100 Honda Civic  வாங்கும் விலைக்கு சமமானது.

Bugatti Veyron இனது முன் மற்றும் பின் சட்டங்கள் (Front and Rear Frame) தயாரிப்பது விமானங்கள் தயாரிக்க பயன்படும் உலோகத்தினால். இது தவிர, முன் சட்டத்தையும் பின் சட்டத்தையும் இணைப்பது வெறும் 14 ஆணிகள் (Nuts). ஒவ்வொன்றும் Titanium என்னும் உலோகத்தால் உருவாகபட்டவை. ஒன்றினது விலை $100.00.


இதனது எந்திரவலு1001 horsepower,  இது சாதாரண கார்களை போன்று ஐந்து மடங்கு வலுமிக்கது. இவ்வாறு வலுமிக்க எந்திரத்தை கொண்டிருப்பதால் இதனை கட்டுப்படுத்த உணரிகள் (Sensors) பயன்படுத்தபடுகின்றன. இதுவரை தயாரிக்கப்பட்ட ஒட்டுமொத்த Bugatti களின் எண்ணிக்கை 300 தான்.

Source: Wikipedia and National Geographic

ஆக்கத்தின் நிறை குறைகளை தவறாது சுட்டிக்காட்டவும். ♥

1 comment:

  1. நல்ல ஆக்கம்... தெரியாத விடயம் ..தொடர்ந்து எழுதவும் ... வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete